பாஜக - அதிமுக கூட்டணி அமைந்ததில் இருந்து முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தில் காய்ச்சல் வந்து விட்டதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மறைக்கவுமே முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஊர் ஊராக செல்வதாக தெரிவித்தார்.