தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. BSP வழக்கறிஞர் அணியின் மாநில துணைத் தலைவர் சந்தீப் அனுப்பி உள்ள நோட்டீஸில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க வேண்டும் எனவும், 5 நாட்களுக்குள் நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.