தமிழக வெற்றிக் கழகம் கொடியில் யானை சின்னம் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிஎஸ்பி கொடியில் யானை சின்னம் பயன்படுத்தி வருவதாகவும், தேர்தல் ஆணையத்தால் நிரந்தர சின்னமாக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியவர், 50 ஆண்டுகளாக யானை சின்னத்தை பகுஜன் சமாஜ் கட்சி பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.