திமுகவை மட்டுமே நம்பி விசிக அரசியல் செய்வதாக சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பேசிவருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தொண்டர்களுடன் முகநூல் நேரலையில் பேசிய திருமா, தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் எனவும், திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் எனவும் கூறினார். மேலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர துணிவு,தெளிவு,தொலைநோக்கு பார்வை வேண்டும் என பேசியுள்ள திருமா, இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அற்பர்கள் தொடர்ந்து விசிகவிற்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.