அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஞானசேகரனின் செல்போனில் வேறு ஒரு பெண்ணின் வீடியோ இருந்ததாகவும், அந்த பெண் யார் என ஏன் விசாரிக்கவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக SIT முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். ஞானசேகரனுடன் பேசிய எஸ்.ஐ. குணசேகரன், கோட்டூர்புரம் எஸ்.ஐ. கோவர்தன் உள்ளிட்டோரை SIT அதிகாரிகள் விசாரிக்கவில்லை என குறை கூறினார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்றார். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.