மாம்பழங்களின் விலை வீழ்ச்சியால் தவிக்கும் விவசாயிகளை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் காப்பாற்றி வரும் சூழலில், தமிழக அரசு மட்டும் விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 40 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மீதமுள்ள மாம்பழங்களும் அறுவடை செய்தால் நிலைமை மோசமாகி விடும் என எச்சரித்துள்ளார். இதனால் உடனடியாக மாம்பழங்கள், மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதையும் படியுங்கள் : ஹெச்.ராஜா மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு..