தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10 புள்ளி 50 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிவிப்பை வரும் 29 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் மணிமண்டப திறப்பு விழாவில் வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் இன்னுயிர் நீத்து 37 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், உயிர்த்தியாகம் செய்ததன் நோக்கம் இன்றும் நிறைவேற்றப்படவில்லை என்பது சமூக அநீதி என குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.