அதிமுக-பாஜக கூட்டணி என்பது புதிய கூட்டணி அல்ல கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தோல்வியை தழுவிய கூட்டணிதான் என்று அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மிகப்பெரிய கூட்டணி அமைத்துவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவதெல்லாம் தோல்வியடைந்த கூட்டணி என்றும், மக்கள் ஆதரவு திமுகவிற்கு தான் என்றும் தெரிவித்தார்.