அதிமுக மிக கஷ்டமான காலத்தில் உள்ளதாகவும், முதுகு தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் நிமிர முடியவில்லை என்றும் மத்திய சென்னை திமுக எம்.பி.,தயாநிதி மாறன் விமர்சித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த பத்தாண்டுகளாக மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்போ அல்லது ஜாதிவாரி கணக்கெடுப்போ நடத்தாமல், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.