அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை- குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதுபற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி பொறுப்புகளில் இருந்து எதற்காக நீக்கினார்கள் என தமக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என தளவாய் சுந்தரம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.