தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் வாயில் முன்பு திமுக மாணவர் அணியினர் சென்று ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை வரும் வாரங்களில் மேற்கொள்ள உள்ளதாக அந்த அணியின் செயலாளர் ராஜூவ் காந்தி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜூவ் காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.பி ஆ.ராசா பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.