கூடுதலாக மது வணிகம் நடைபெறும் டாஸ்மாக் கடைகளில், அடுத்த ஒரு வாரத்திற்குள் 2ஆவது விற்பனைக் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அவர், இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது எனவும், படிப்படியாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.