நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக அரசு உரிய வாய்ப்பை தருவதில்லை என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சமூக நீதி காவலர் என போற்றப்படும் முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஐயப்பன் குறித்து சர்ச்சையான வகையில் பாடியதாக பாடகி இசைவாணி மீது இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுவது தொடர்பான கேள்விக்கு, அதானி விவகாரத்தை திசைதிருப்பவே, தமிழ்நாட்டில் பாடகி இசைவாணி குறித்து பலர் பேசிவருவதாக கூறினார்.