தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ள நடிகை விஜயலட்சுமி, பப்ளிசிட்டி பண்ணிட்டு சுத்துற நீங்கதான் கூமுட்டை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், சீமான் என்ன உத்தமரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாதகவில் நடக்குற ஊழலை சரி செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ள விஜயலட்சுமி, திமுகவுக்கும் விஜய்க்கும் என்ன செய்யனும் என்று நல்லா தெரியும் என கூறியுள்ளார்.