துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு காமெடி நடிகர் வடிவேலு வாழ்த்துத் தெரிவித்தார். மதுரையில் உள்ள தனியார் விடுதியில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் வடிவேலு பூங்கொடுத்து கொடுத்தும் கட்டிப் பிடித்தும் வாழ்த்துத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினும், நடிகர் வடிவேலுவும் மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.