ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி லிட்டருக்கு 11 ரூபாய் உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தை கைவிட வேண்டும் என ஆவின் நிறுவனத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.