ஆதவ் அர்ஜுனா புதிதாக சேர்ந்ததால் கொள்கை புரிதலின்றி பேசியதை திருமாவளவன் நிச்சயம் ஏற்க மாட்டார் என தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார். துணை முதலமைச்சர் பதவி குறித்து விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஆதவ் பேசியது கூட்டணி அரணுக்கும், அரசியல் அறத்திற்கும் ஏற்புடையது அல்ல என கூறினார்.