தமிழகத்தில் ஒரே நாளில் 8 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு குற்றங்களை மூடிமறைத்து அதனை திசைதிருப்புவதில் ஆர்வம் காட்டுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி, தூத்துக்குடி வரை ஒரே நாளில் 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் பல கொலைகள் மதுபோதையால் நடந்தேறி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும், சட்ட-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.