4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யபட்ட வழக்கில் பாஜக எம்பி செல்வகணபதி உள்ளிட்ட 3 பேர் 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணம் என சந்தேகம் எழுந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பாஜக பிரமுகர்கள் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.