3 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு உலக தலைவர்களையும் சந்தித்து பேசியதுடன், நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டதிலும் உரையாற்றினார். இந்நிலையில் மூன்று நாட்கள் பயணம் முடிந்து டெல்லி வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.