மதிய நேரம்.. கோவை மேட்டுப்பாளையத்துல உச்சந்தலைய கிழிக்கிற அளவுக்கு உச்சி வெயில் பயங்கரமா இருந்துச்சு. காத கிழிக்கிற அளவுக்கு வாகனங்களோட ஹாரண் சவுண்ட் கேட்டுக்கிட்டு இருக்க, அங்க இங்கன்னு மக்கள் நடந்து போய்ட்டு இருந்தாங்க. இப்படிப்பட்ட ரோட்டுல ஒரு இளைஞர, இன்னொரு இளைஞர் கையில அரிவாளோட விரட்டிட்டு போய்ருக்காரு. அந்த இளைஞரோ தன்னோட உயிர காப்பாத்திக்கிறதுக்காக பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள ஓடியிருக்காரு. அங்க இருந்த காவலர்கள், கையில அரிவாளோட வந்த இளைஞர மடக்கி பிடிச்சு விசாரணை பண்ணாங்க. இப்படி, அரிவாளால வெட்டி கொலை முயற்சி பண்ற அளவுக்கு, இளைஞர் மேல அப்படி என்ன கோபம்னு கேட்ட காவலர்கள், ரெண்டு பேர்கிட்டையும் விசாரிச்சாங்க. அதுல, போலீஸ்காரங்களேயே திணறடிக்குற மாதிரி பல பகீர் உண்மைகளாம் வெளியேவந்து அதிர வச்சிருக்கு. மேட்டுப்பாளையத்துல உள்ள மகாதேவபுரத்த சேர்ந்தவர் 36 வயசான அலாவுதீன். இவரோட மனைவி சுமையா. கார் டிரைவரான அலாவுதீனுக்கும் காரமடை நகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமாரோட இளைய மகன் சரண்குமார் மனைவி பூஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்குது. சரண்குமார் காரமடையில சொந்தமா செல்போன் கடைய வச்சு நடத்திட்டு வந்திருக்காரு. சரண்குமார் வெளிய போற நேரம்லாம் மனைவி பூஜாதான் கடையில இருந்துருக்காங்க. அந்த கடைக்கு ரீச்சார்ச் பண்றதுக்காக அலாவுதீன் அடிக்கடி போறதுமா வர்றதுமா இருந்தப்பதான் பூஜாவுக்கும், அலாவுதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்குது. சாதாரணமா ஆரம்பிச்ச பழக்கம், நாளடைவுல திருமணத்த மீறிய உறவா மாறியிருக்குது. பூஜா, அடிக்கடி அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு அலாவுதீன தனிமையில சந்திச்சு பேசியிருக்காங்க. ஆனா, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சிக்கிற விஷயத்த, அந்த ஏரியாவுல குடியிருக்குற ஒருத்தரு பூஜாவோட கணவன் சரண்குமார்கிட்ட சொல்லிருக்காரு. விஷயத்த கேள்விப்பட்டு உடனே கோவப்படாம, அது உண்மைதானான்னு செக் பண்ணி பாத்திருக்காரு. மனைவி பூஜாவோட செயல்பாடுகள உன்னிப்பா கவனிச்சப்ப, அவங்க அடிக்கடி ஃபோனும் கையுமாவே இருந்தது சரண்குமாருக்கு தப்பா பட்டுருக்கு. ஏரியால குடியிருக்குறவங்க சொன்னது, மனைவி எந்நேரமும் செல்போனும் கையுமா இருக்குறதுன்னு, இதெல்லாத்தையும் வச்சு தன்னோட மனைவிக்கும், கார் டிரைவர் அலாவுதீனுக்கும் தகாத உறவு இருக்குறத கண்டுபிடிச்சி பூஜாவ கண்டிச்சிருக்காரு. ஆனா, கணவனோட பேச்ச ஒரு பொருட்டாவே மதிக்காத பூஜா, தன் இஷ்டம் போல, அலாவுதீனோட உறவ தொடர்ந்துட்டே இருந்துருக்காங்க. ஒருநாள், சரண்குமார் வீட்டுல இருந்த நேரத்துல, அலாவுதீன்கிட்ட இருந்து பூஜாவுக்கு ஃபோன் கால் வந்திருக்கு. இத பாத்ததும் சரண்குமாருக்கு ஆத்திரம் தலைக்கேறிருக்கு. எத்தன முறை சொன்னாலும் திருந்தவே மாட்டியான்னு கேட்டு, மனைவிய சரமாரியா அடிச்சிருக்காரு.இதனால கடுப்பான பூஜா, கர்நாடக மாநிலம் மங்களூர்ல உள்ள தன்னோட அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க. சரண்குமாருக்கும், பூஜாவுக்கும் கல்யாணமாகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. அதுக்குள்ளே வேறொருத்தரோட பழக்கம் ஏற்பட்டு, அத கைவிட முடியாம பூஜா தாய் வீட்டுக்கு போய்ட்டாங்க. மனைவிய சமாதனப்படுத்தி வீட்டுக்கு கூப்பிட்டு வர்றதுக்காக மங்களூருக்கு சரண்குமார் போனப்ப, பூஜா வீட்டுக்கு வர மறுப்பு தெரிவிச்சிருக்காங்க. அது சரண்குமாருக்கு இன்னும் உச்சக்கட்ட கோபத்த ஏற்படுத்திச்சு. அம்மா வீட்டுக்கு போயியும் பூஜா, அலாவுதீனோட தொடர்புலதான் இருக்குறா-ங்குற விஷயம் தெரிஞ்சு கொந்தளிச்சிருக்காரு சரண்குமார். இந்த சூழல, ஏப்ரல் 14-ந் தேதி அன்னைக்கி நைட்டு திமுக கவுன்சிலர் ரவிக்குமார், அலாவுதீனுக்கு ஃபோன் பண்ணி, என் மருமகளோட பேசுறத இதோட நிறுத்திக்கோ, இல்லனா வேற மாதிரி ஆகிடும்னு மிரட்டல் விட்டது மட்டுமில்லாம தகாத வார்த்தைகளால திட்டியிருக்காரு. அத கேட்டதும் ஆத்திரமடைஞ்ச அலாவுதீன், காரமடைல உள்ள ரவிக்குமார் வீட்டுக்கு போய் சண்ட போட்டுருக்காரு. அப்ப, வீட்டுல ரவிக்குமார் மூத்த மகன் மணிகண்டன், இளைய மகன் சரண்குமார் மூணு பேரு மட்டும்தான் இருந்துருக்காங்க. மணிகண்டன், சரண்குமார் ரெண்டுபேரும் அலாவுதீனோட கை,கால்கள இறுக்கி பிடிக்க ரவிக்குமார், அவரோட கழுத்த நெரிச்சு கொன்னுருக்காரு. கொலைய மறைக்கிறதுக்காக பக்கத்துல உள்ள மாதேஸ்வரன் கோயில் மலை அடிவாரத்துக்கு அலாவுதீன் சடலத்த கொண்டுப்போய் பெட்ரோல் ஊத்தி எரிச்சிட்டு எதுவும் நடக்காத மாதிரி கமுக்கமா இருந்துருக்காங்க. சவாரிக்கு போன அண்ணன் அலாவுதீன் ரெண்டு நாளா வீட்டுக்கே வரலன்னு பதற்றமான தம்பி ஹாரீஷ், மேட்டுப்பாளையம் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணியிருக்காரு. அந்த புகார் அடிப்படையில காணாமப்போன அலாவுதீன பல இடங்கள தேடியும் கிடைக்கல. இதுக்கு நடுவுல, அலாவுதீனோட மனைவி சுமையாவுக்கு, சிறுமுகைல பழைய கடை வச்சிருக்குற ஹக்கிமோட தொடர்பு இருக்குறதா சொல்லப்படுது. ஒருவேள அண்ணியோட தகாத உறவு தெரிஞ்சுதான் அண்ணன் அலாவுதீன் மன உளைச்சல ஊரவிட்டு கண்காணத இடத்துக்கு போயிட்டாரோன்னு தெனமும், அண்ணி சுமையாக்கிட்ட சண்ட போட்டுட்டு இருந்துருக்காரு ஹாரிஷ். ஆனா, சுமையாவும் கணவன் அலாவுதீன் காணாம போனத நினைச்சு மன உளைச்சலதான் இருந்ததா சொல்லி இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலாகியும் அலாவுதீன பத்தி எந்த தகவலும் இல்ல.இந்த சூழல, ஒன்ற வருஷத்துக்கு அப்புறம் சிறுமுகைல உள்ள ஹக்கீமோட கடைக்கு போன ஹாரிஷ், நீயும் சுமையாவும் சேந்துதான் என் அண்ணன ஏதோ பண்ணிட்டீங்க, என்ன பண்ணீங்கன்னு சொல்லுன்னு கேட்டு அரிவாள எடுத்து வெட்ட பாயவே, ஹக்கிம், ஷாரிஷ்கிட்ட இருந்து தப்பிச்சு பக்கத்துல உள்ள ஸ்டேஷனுக்கு ஓடி போயிருக்காரு. அப்ப, அங்க இருந்த காவலர்கள், ஹாரிஷ பிடிச்சு விசாரிச்சப்ப, எங்க அண்ணன் காணமப்போன கேஸ்ல ஹக்கிமூக்கு தொடர்பு இருக்குன்னு ஹாரிஷ் சொல்லவே, காவலர்களும் இல்லீகல் சம்பந்தமா அலாவுதீன, ஹக்கிம் கொலை பண்ணிருப்பானோ-ங்குற சந்தேகத்துல விசாரிச்சாங்க. அப்ப,அலாவுதீன் காணாம போனதுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. எனக்கு காரமடை கவுன்சிலர் மேலதான் சந்தேகமா இருக்கு, அவங்கள பிடிச்சு விசாரிங்கன்னு சொல்லிருக்கான் ஹக்கிம். அவங்கள எதுக்கு நாங்க விசாரிக்கணும், தப்பிக்கிறதுக்காக பொய் சொல்றியான்னு ஹக்கிம கேட்டுருக்காங்க போலீஸ். அப்போ, கவுன்சிலர் இளைய மகன் சரண்குமாரோட மனைவி பூஜாவுக்கும், அலாவுதீனுக்கும் தொடர்பு இருந்ததாவும், அதனால, அவங்களுக்குள்ள அடிக்கடி தகராறு ஏற்பட்டதாவும் சொல்லிருக்கான். ஒருவேள இவன் சொல்றது உண்மையா இருக்குமோன்னு யோசிச்ச போலீஸ், நேரா காரமடைல உள்ள கவுன்சிலர் ரவிக்குமார் வீட்டுக்கு போயிருக்காங்க. வீட்டுல கவுன்சிலர் ரவிக்குமார், மகன்கள் மணிகண்டன், சரண்குமார், மருமகள் பூஜான்னு எல்லாரும் இருந்தாங்க. அப்ப, அலாவுதீன பத்தி போலீஸ்காரங்க விசாரிக்க ஆரம்பிச்சதும் கவுன்சிலர் ரவிக்குமாருக்கும் அவரோட ரெண்டு மகன்களுக்கும் வேர்த்து கொட்டியிருக்கு. அத கவனிச்ச போலீஸ், மூணு பேர்கிட்டையும் விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சப்பதான், அலாவுதீனுக்கு, ஏப்ரல் 14-ந் தேதி நைட்டு நடந்த கொடூரத்த மூணு பேரும் ஒன்னுவிடாம எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. அதுக்குப்பிறகு, அலாவுதீன கொலை பண்ண இடத்துல போலீஸ் எலும்புகள சேகரிக்குற வேலையில இறங்கிருக்காங்க. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் -ங்குற பழமொழி மாதிரி ஒன்ற வருஷத்துக்கு முன்னாடி பண்ண கொலைக்கு திமுக கவுன்சிலரும் அவரோட ரெண்டு மகன்களும் இப்போ சிறையில கம்பி எண்ணிட்டு இருக்காங்க. இளைஞர ஒருத்தர கொலை பண்ணிட்டு உடலையும் எரிச்சிருக்காங்க. கொலையான உறவினர்களும் மகன காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. ஆனா, போலீஸ்காரங்க அந்த இளைஞர கண்டுபிடிக்குற முயற்சியில தீவிரமா இறங்குனாங்களா..? அப்படி தீர விசாரணையில ஈடுப்பட்டிருந்தா இந்த கொலை நடந்த கொஞ்ச நாட்களே தெரியவந்து கொலையாளிகள் அப்பவே சிக்கியிருப்பாங்க. கார் டிரைவர் அலாவுதீன் மிஸ்ஸிங் கேஸ்ல, போலீஸ் அலட்சியமாவும், மந்தமாவும் செயல்பட்டதாலதான் கொலையாளிகள் ஒருவருஷத்துக்கு அப்புறம் சிக்கிருக்காங்கன்னு சொல்றாங்க. ஒன்ற வருஷத்து முன்னாடி காணாம போயிட்டாரு... மனைவி புகார் கொடுத்தாங்க... எங்க தேடியும் கிடைக்கல.. கிடப்புல போட்டுட்டாங்க போலீஸ் சிறுமுகை பழைய இரும்பு கடை வச்சிருக்காரு ஹக்கீம் அலாவுதீன் தம்பி ஹாரீஷ்... சுமையா அண்ணியோட நீதான தொடர்புல இருந்தஹக்கீம் கையில வெட்டிட்டான் ஹாரீஷ்..மேட்டுப்பாளையத்துல ஹக்கீம் புகார்.. கொல்ல வரான்னு கம்ப்ளைண்ட்.. ஹாரீஷ பிடிச்சு விசாரிச்சாங்க அலாவுதீன் காணாம போனதுல ஹக்கிமூக்கு தொடர்பு இருக்கு...ஹக்கீம் கிட்ட விசாரணை பண்ணாங்க.காரமடை நகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார்...ரவிக்குமார் மருமகளோட அலாவுதீனுக்குதொடர்பு இருக்கு.. விசாரணை பண்ணுங்கன்னு ஹக்கீம் சொல்றான்.. கவுன்சிலர் வீட்டுக்கு போய்விசாரணை பண்ணாங்க..இளைய மகன் சரண்குமார் மனைவி பூஜா கூட அலாவுதீன் கள்ளக்காதல்.. பூஜா, சரணுக்கும் 2 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாச்சு.. ஒரு ஆண் குழந்தை இருக்கு.. பூஜாவ கண்டிச்ச கணவன் சரண்குமார்.. சரண்குமார், ரவிக்குமார், அலாவுதீன் கான் கால பேசுனாங்க.. அலாவுதீன தகாத வார்த்தைல திட்டுனாங்க.. அன்னைக்கி நைட்டே ரவிக்குமார் வீட்டுக்கு போய் சண்ட போட்றான்.. வீட்டுல ரவிக்குமார் 2 மகன்கள்தான் இருந்தாங்க... வாக்குவாதத்துல அலாவுதீன் கழுத்த நெரிச்சு கொன்னுட்டாங்க.. கொலைய மறைக்க மாதேஸ்வரன் மலை அடிவாரத்துக்கு கொண்டு போனாங்க.. அங்க குப்பை கிடங்குல பெட்ரோல ஊத்தி எரிச்சிட்டிங்க.. 2 மகன்களோட சேர்ந்து அலாவுதீன் கழுத்த நெரிச்சு கொன்னுட்டாரு ரவிக்குமார்... கொலைய மறைக்க குப்பை கிடங்குல அலாவுதீன் உடல 3 பேரும் சேந்து எரிச்சிட்டாங்க... கொலை பண்ற முடிவுலதான் அலாவுதீன வரவச்சாங்க.. போன மாசம் மனைவி பூஜாவ வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டான் சரண்குமார்.. 3 வழக்கம்போல இருந்தாங்க... சம்பவம் நடந்தது 14-4-2024 மேட்டுப்பாளையத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக கார் ஓட்டுநர் எரித்துக்கொலை ஓராண்டாக காணாமல் போனதாக தேடி வந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ஆளும் கட்சி கவுன்சிலர் மற்றும் இரண்டு மகன்கள் கைது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டான்டில் கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார் இவர் கடந்த ஓராண்டாக காணாமல் போன நிலையில் அது குறித்து அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர் அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில் தனது அண்ணனை காணவில்லை எனது அண்ணியுடன் நீ தவறான முறையில் தொடர்பு வைத்துள்ளாய் இதனால் என் அண்ணன் அலாவுதீன் கானாமல் போய்விட்டார் உன்னை தீர்த்து கட்டாமல் விட மாட்டேன் என அலாவுதீன் தம்பி ஹாரீஸ் சிறுமுகை சாலையில் உள்ள ஹக்கீம் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது இந்த சம்பவத்தின் அடிப்படையில் ஹாரீஸ் மற்றும் ஹக்கீம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கொலை சம்பவம் ஓராண்டாற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது காணாமல் போன அலாவுதீன் மனைவிக்கும் ஹக்கீம் என்பவருக்கும் தொடர் என்பதால் ஹக்கீம் தான் ஒரு வேளை அலாவுதீனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்பட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஹக்கீம் கொடுத்த தகவலின் பேரில் அலாவுதீன் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டும் போது ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்தது அதனை விசாரித்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளதாக அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு ஆளும் கட்சி கவுன்சிலர் அவரது மகன்களுடன் சேர்ந்து அலாவதீனை கொலை செய்தது தெரியவந்துள்ளது அலாவுதீன் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டும் போது அங்கு செல்போன் கடை வைத்து நடத்தி வந்த காரமடை நகராட்சி திமுக 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் சரண்குமார் என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது இதனால் இருவரும் சேர்ந்து பழகி வந்ததுடன் இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது நீண்ட நாட்களாக இந்த கதை தொடர்ந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த கள்ளத்தொடர்பு சரண்குமாருக்கு தெரியவந்தது இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார் இதன் காரணமாக இவரது மனைவி கோபித்து கொண்டு தனது அம்மாவீடு உள்ள கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதிக்கு சென்றுள்ளார் இதனையடுத்து அலாவுதீனை தீர்த்து கட்ட நினைத்து நைசாக பேசி அலாவுதினை வரவழைத்த திமுக கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் சரண்குமார், மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர் பின்னர் உடலை எடுத்து சென்று மாதேஸ்வரன் மலை கோவில் பின்புறம் உள்ள புதர் குப்பைகளை கொட்டும் இடத்தில் வைத்து தீயிட்டு எரித்து விட்டு தங்களது இயல்பான வாழ்க்கையை நடத்தியுள்ளனர் மேலும் கர்நாடகாவில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்து சரண்குமார் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது இதனையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது காரமடை திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் சரண்குமார், மணிகண்டன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் கைது செய்யப்பட்ட மணிகண்டன் திமுக இளைஞரணி பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் எரிக்கப்பட்ட அலாவுதீன் உடல் பாக எழும்பு களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி யுள்ளார். கள்ளத்தொடர்பு காரணமாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…