ரத்த காயங்களுடன் ஏரியில் மிதந்து கொண்டிருந்த இளைஞர் சடலம். டயர் தடத்தை வைத்து துப்பு துலக்கிய காவல்துறையினர். காரில் டெட்பாடியுடன் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்த மர்மகும்பல். ஒசூரில் இருந்து ஆந்திராவுக்கு சென்று சடலத்தை ஏரியில் வீசிய என்ன காரணம்? கொலைக்கான மோட்டிவ் என்ன? குற்றவாளிகள் சிக்கினார்களா?ஆந்திர மாநிலம், குப்பம்-ங்குற கிராமத்துல உள்ள ஏரியில ஒரு இளைஞர் சடலம் கெடந்துருக்கு. அத பாத்த அந்த கிராம மக்கள், உடனே போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. தீயணைப்பு படை வீரர்களோட ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், கிணத்துக்குள்ள இருந்த சடலத்த மீட்டு, அது யாருன்னு விசாரணை நடத்திருக்காங்க. கடந்த ஒரு வாரத்துக்குள்ள காணாம போனதா ஸ்டேஷனுக்கு வந்த கம்ப்ளைண்ட் லிஸ்ட எடுத்து விசாரிச்சிருக்காங்க. ஆனா, அதுல எந்த துப்பும் கிடைக்கல. இளைஞர் சடலம் மீட்கப்பட்ட இடத்த சுத்தி உள்ள சிசிடிவி கேமராக்கள போலீஸ் அலசி ஆராய ஆரம்பிச்சாங்க. இதுக்கு இடையில, ஏரி பக்கத்துல ஒரு கார் வந்துட்டு போனதுக்கான டயர் தடம் இருந்தத போலீஸ் கவனிச்சிருக்காங்க. அப்ப, இந்த இளைஞர வேற எங்கையோ வச்சு கொலை பண்ணிட்டு, டெட்பாடிய கார்ல தூக்கிட்டு வந்து, இங்க தூக்கி போட்டுட்டு கொலையாளிங்க தப்பிச்சு போயிருப்பாங்களோன்னு போலீஸ் சந்தேகப்பட்டாங்க. அந்த கோணத்துல விசாரணைய முடுக்கிவிட்டப்ப தான், ஒசூர் வாகன பதிவெண் கொண்ட ஒரு கார், அந்த ஏரிக்கு வந்துட்டு போனது சிசிடிவி கேமரா மூலமா தெரிய வந்துருக்குது. காரோட நம்பர் பிளேட் கிளியரா தெரியாததால, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள ஆய்வு செஞ்சு, அந்த காரோட நம்பர கண்டுபிடிச்சாங்க. அது, ஒரே ஒரு எண் கொண்ட ஃபேன்ஸி நம்பரா இருந்துருக்கு. அந்த காரோட ஓனர் யாரு, என்னன்னு விசாரிச்சு, சிவகங்கையில இருக்குற கார் ஓனர பிடிச்சு விசாரிச்சப்ப, ஒரு வாரமா கார நான் யூஸ் பண்ணல, என் பிரண்டு டூர் போனும்னு சொல்லி கார வாங்கிட்டு போயிருந்ததா போலீஸ்கிட்ட சொல்லிருக்காரு.அதுக்கப்புறம் அந்த பிரண்ட் யாரு, அவன் வீடு எங்க இருக்குன்னு கேட்டு, நேரா அந்த வீட்டுக்கு போய், அங்க இருந்த முருகேசன பிடிச்சு விசாரிச்சிருக்காங்க. மொதல அது இதுன்னு சொல்லி மலுப்புனவன், போலீஸ் லத்திய பாத்ததுக்கு அப்புறம் ஆட்டோமெட்டிக்கா எல்லாத்தையும் கொட்டியிருக்கான். சிவகங்கை, வேலங்குளம் கிராமத்த சேர்ந்த முருகேசனுக்கும், அதே கிராமத்த சேர்ந்த அழகுராஜுக்கும் தொழில் ரீதியா பிரச்சனை ஏற்பட்டிருக்கு. இந்த பிரச்சனை சம்பந்தமா, சென்னை மறைமலைநகர்ல நெய் வியாபாரம் பாத்துட்டு இருந்த அழகுராஜா, ஒசூர்ல வேலை பாத்துட்டு இருந்த முருகேசனுக்கு ஃபோன் பண்ணி கொலை மிரட்டல் விட்டுருக்காரு. சென்னைக்கு வந்துட்டேன்னு நிம்மதியா இருக்காதா, உன்ன கொல்லாம விட மாட்டேன்னு மிரட்டுற தோனியில பேசிருக்காரு அழகுராஜா. கொலை மிரட்டல் வந்ததும் பயந்துபோன முருகேசன் நம்மள போட்டு தள்ளுனாலும் தள்ளிடுவான், அதுக்குள்ள அவன் கதைய நம்ம முடிச்சிடும்னு பிளான் போட்டுருக்கான். அதுக்காக, ஒசூர்ல உள்ள தன்னோட நண்பர்கள் நாலு பேர கார்ல கூப்பிட்டுக்கிட்டு சென்னைக்கு வந்த முருகேசன், மறைமலைநகர்ல இருந்த அழகுராஜாவ நண்பர்களோட சேந்து வெட்டி கொன்னுருக்காங்க. அதுக்குப்பிறகு, கையோட அழகுராஜாவோட சடலத்த கார்ல எடுத்துக்கிட்டு போய் கர்நாடக மாநிலம் பள்ளூர் பகுதியில வீசிட்டு நேரா கர்நாடக நீதிமன்றத்துல போய் சரண்டராகிட்டாங்க. இந்த சம்பவம் நடந்தது 2024-ல. அடுத்து, முருகேசன் உட்பட அஞ்சு பேர் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ் அவங்கள அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க. நாலு மாசத்துக்கு அப்பறம் அழகுராஜா கொலை கேஸ்ல இருந்து ஜாமின்ல வெளியே வந்த முருகேசன், ஒசூர் பெத்த எலசகிரி பகுதியில தங்கி பிளம்பர் வேலை பாத்துட்டு இருந்துருக்கான். முருகேசன் ஜாமின்ல இருந்து வெளிய வந்த விஷயம் அழகுராஜாவோட அண்ணன் ராஜசேகர் காதுக்கு போக, தம்பிய கொலை பண்ணவன பழிவாங்கம விடமாட்டேன்னு துடியா துடிச்சிட்டு இருந்துருக்கான். கூலிப்படைய சேர்ந்த வேல்பாண்டியன ஏவி முருகேசன் கதைய முடிக்க பக்காவ ஸ்கெட்ச் போட்டுருக்கான் ராஜசேகர். முருகேசன் தனியா போகும்போது கருவறுத்தடலாம்னு கூலிப்படை பிளான் போட்ட நேரத்துல, கடந்த 26ஆம் தேதி இரவு 10 மணியளவுல முருகேசன் ஆதித்யா லே அவுட் பகுதி வழியா கார்ல போயிட்டுருந்துருக்கான். அப்போ, பயங்கர ஆயுதங்களோட பைக்குல வந்த அந்த கூலிப்படை கும்பல், முருகேசனோட கார வழிமறிச்சு நின்னு கார் கண்ணாடிய உடைச்சு தாக்குதல் நடத்திருக்கு.காரை விட்டு இறங்காம இருந்த முருகேசன், உயிர காப்பாத்திக்கிறதுக்காக நல்லூர் காவல்நிலையத்துல கார நிறுத்தி, தனக்கு நேர்ந்த தாக்குதல பத்தி போலீஸ்காரங்ககிட்ட சொல்லிருக்கான். அடுத்து, தாக்குதல ஈடுபட்டவங்கள பிடிச்சு விசாரணையில இறங்குன போலீஸ், கூலிப்படைய சேர்ந்த வேல்பாண்டிகிட்ட கிடுக்குபிடி விசாரணை பண்ணாங்க. அப்ப, கோகுல்ராஜ்தான் எங்களுக்கு முருகேசன் இருக்குற இடத்த சொன்னான். அந்த அடிப்படையா வச்சுதான் முருகேசன வழிமறிச்சு கொலை வெறி தாக்குதல் நடத்துனோம்னு சொல்லிருக்கான் வேல்பாண்டி. யார் அந்த கோகுல்ராஜ்? என்ன ஏதுன்னு விசாரிச்சப்ப, ஒசூர் நியூ ASTC அட்கோ பகுதியில உள்ள சுனில்-ங்குற நபரோட டீ கடையில கோகுல்ராஜ் வேலை பாத்துட்டு இருந்தது தெரியவந்துச்சு.முருகேசனுக்கும், கோகுல்ராஜுக்கும் ஏற்கனவே பழக்கம்னு சொல்லப்படுது. கூடவே இருந்து கூலிப்படைக்கிட்ட நம்மல கோர்த்து விட்டுருக்கானேன்னு ஆத்திரமடைஞ்ச முருகேசன், கடந்த 16ஆம் தேதி கோகுல்ராஜ் வேலை பாக்குற டீ கடைக்கு போயிருக்கான்.சிவகங்கையில உள்ள தன்னோட ஃபிரண்டோட கார வாங்கிட்டு அடியாட்களோட அங்க போன முருகேசன், டீ கடையில இருந்த கோகுல்ராஜ கழுத்த பிடிச்சு இழுத்துட்டு வந்து காருக்குள்ள போட்டுருக்கான். அதுக்குப்பிறகு, கார்ல இருந்த அடியாட்களும், முருகேசனும் சேந்து கூலிப்படைக்கு ஸ்பை வேலை பாக்குறியான்னு கேட்டு கோகுல்ராஜ அடிச்சே கொலை பண்ணி ஆந்திரா மாநிலம் குப்பம் கிராமத்துல உள்ள ஏரியில வீசிட்டு எஸ்கேப் ஆகிருக்குது. கோகுல்ராஜ் கடத்தப்பட்ட அன்னைக்கே போலீஸ்ல புகார் கொடுக்கப்பட்டுச்சு. ஆனா, போலீஸ்கரங்களோ அந்த கேஸ்ல ஆர்வம் காட்டாத நிலையில, 17-ந் தேதி கோகுல்ராஜ் ஆந்திராவுல சடலமா மீட்கப்பட்டுருக்காரு. இது சம்பந்தமா வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், தலைமறைவா இருக்குற கொலையாளி முருகேசன் அவனோட கூட்டாளிகளையும் ஸ்பெஷல் டீம் அமைச்சு தேடிட்டு இருக்காங்க.இதையும் பாருங்கள் - அண்ணன் கொ*லக்கு பழிக்குப் பழி, SPY வேலை பார்த்த டீ மாஸ்டர் | CrimeNews | CrimeUpdate