பணம், நகைகளை அள்ளிக் கொடுத்தும் அடங்காத வரதட்சணை வெறி. திருமணம் முடிந்து ஆண்டுகள் கடந்த பிறகும் வரதட்சணை கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன். வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கொடூரம். தான் அனுபவித்த கொடுமைகளை, தனது அண்ணனிடம் கூறி கண்ணீர் வடித்த பெண் போலீஸ் கமாண்டோ. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த கொடூரம். நடந்தது என்ன? மச்சான் அங்கூர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த நிகில்ஜனவரி 22-ந் தேதி நைட்டு, பணியில இருந்த நிகில்-ங்குற இளைஞருக்கு ஒரு ஃபோன் கால் வந்துருக்கு. எதிர்முனையில பேசுனது வேற யாரும் இல்ல, அவரோட தங்கச்சி கணவர் அன்கூர். உன் தங்கச்சிய கொன்னுட்டேன், யாரும் என்ன ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு அந்த ஃபோன கட் பண்ணிருக்காரு அங்கூர். அவரு சொன்ன வார்த்தைகள கேட்டதும் பதட்டமான நிகில், உடனே தன்னோட பெற்றோர கூப்பிட்டுக்கிட்டு, டெல்லில உள்ள தங்கை காஜல் வீட்டுக்கு போயிருக்காரு. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தங்கை காஜல்அங்க, ஆசை ஆசையா வளர்த்து கட்டிக் கொடுத்த மகள் காஜல், மூச்சு பேச்சு இல்லாம ரத்த வெள்ளத்துல கிடந்தத பாத்து நிகிலும், அவரோட பெற்றோரும் நொறுங்கிப் போய்ட்டாங்க. உடனே மகள் காஜல மீட்டு ஹாஸ்பிட்டல்ல சேத்துருக்காங்க. அங்க சிகிச்சைல இருந்தவங்க கடந்த 27-ந் தேதி சிகிச்சை பலனளிக்காம உயிரிழந்துட்டாங்க. புகுந்த வீட்டுல பொண்ணு சந்தோஷமா வாழ்ந்து இருந்துருக்கான்னுதான் இத்தன நாளா பெத்தவங்க நினச்சுட்டு இருந்துருக்காங்க. ஆனா, நம்ம பொண்ணு புகுந்த வீட்டுல நரக வேதனைய அனுபவிச்சுட்டு இருந்துருக்காங்குறது ரொம்ப லேட்டாதான் பெத்தவங்களுக்கு தெரியவந்துருக்குது. அங்கூரை காதலித்து திருமணம் செய்த காஜல்ஹரியானவ சேர்ந்த 27 வயசான காஜல், டெல்லி காவல் துறையில ஸ்வாட் (SWAT) பிரிவுல கமாண்டோவா பணி புரிஞ்சிட்டுருந்தாங்க. இவங்களுக்கும், பாதுகாப்புத் துறையில் ரைட்டரா வேலை பாத்துட்டு இருந்த அங்கூருக்கும் பழக்கம் ஏற்பட்டுருக்கு. ஆரம்பத்துல நண்பர்களா பழகுன ரெண்டு பேரும், நாளடைவுல காதலிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்குப்பிறகு, பெற்றோர் சம்மதத்தோட காஜலும், அங்கூரும் கடந்த 2023ல கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க. கூடுதல் வரதட்சணை கேட்டு காஜலுக்கு டார்ச்சர்கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு முகத்த காட்டுன அங்கூர், காஜல் கழுத்துல தாலி ஏறுனதுக்கு அப்புறம் வேறொரு முகத்த காட்டியிருக்கான். கல்யாணத்தப்பவே, காஜலுக்கு வீட்டுல இருந்து நகை, பணம், சீர்வரிசைப் பொருட்கள்லாம் கொடுத்திருக்காங்க. ஆனா, கல்யாணம் முடிஞ்சு சில மாதங்களுக்கு அப்புறம், நீங்க கொடுத்த நகை, பணம்லாம் பத்தாது, திரும்ப உங்க வீட்டுக்கு போய் கூட கொஞ்சம் நகை, பணம்லாம் வாங்கிட்டு வான்னு சொல்லி, அங்கூரும் அவனோட குடும்பத்தினரும் சேர்ந்து காஜல சித்ரவதை பண்ணிருக்காங்க. Related Link யூடியூபில் வீடியோ பார்த்து சகோதரர்கள் கொள்ளை நகை, பணம் கொடுக்க மறுத்ததால் காஜல் மீது தாக்குதல்எங்க வீட்டுல என்ன முடியுமோ அத பண்ணிட்டாங்க, திரும்ப திரும்ப என்னால அவங்ககிட்ட பணம் கேட்க முடியாதுன்னு காஜல் சொன்னதும், கணவன் அங்கூர், மனைவிய சரமாரியா தாக்கி துன்புறுத்திருக்கான். இதுக்கு இடையில, அங்கூர் - காஜல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. அந்தக் குழந்தைக்கு இப்போ 4 வயசு. குழந்தை பிறந்ததுக்கு அப்புறமும் அங்கூரோட குணம் மாறல. தொடர்ந்து, நகை, பணம் கேட்டு மனைவிக்கு குடச்சல் கொடுத்துட்டே இருந்துருக்கான்.வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த அங்கூர்இதுமட்டுமில்ல, காஜலுக்கு, அங்கூர் பாலியல் ரீதியாவும் டார்ச்சர் கொடுத்திருக்கான். ஒருபக்கம் வரதட்சணை கேட்டு டார்ச்சர், இன்னொரு பக்கம் பாலியல் ரீதியா டார்ச்சர்னு காஜல் பெரும் இன்னலுக்கு ஆளாகிருக்காங்க. இதுக்கு இடையில, அங்கூருக்கு வேறொரு பெண் கூட தொடர்பு இருந்ததையும் காஜல், கண்டுபிடிச்சு அத தட்டிக்கேட்டுருக்காங்க. ஆனா, நான் யார் கூடனாலும் பேசுவேன் பழகுவேன், என் இஷ்டப்படி என்ன வேணாலும் பண்ணுவேன், ஆனா அத பத்தியெல்லாம் நீ எந்த கேள்வியும் கேட்கக்கூடாதுன்னு சொல்லி, மனைவிய கண்மூடித்தனமா அடிச்சு கொடுமைப்படுத்திருக்கான், அந்த கொடூரன் அங்கூர்.2-வதாக கர்ப்பம் தரித்த மனைவி காஜல்இதுக்கு நடுவுல காஜல் ரெண்டாவதா கர்ப்பமாகிருக்காங்க. ஆனாலும், அங்கூர் திருந்தவே இல்ல. நாலு மாசம் கர்ப்பிணியான மனைவின்னு கூட பாக்காம அவங்கள ரூமுக்குள்ள அடைச்சு வச்சு கொடுமைப்படுத்திருக்கான். கணவன் என்னதான் கொடுமை பண்ணாலும், டார்ச்சர் பண்ணாலும் அத பத்தி பெத்தவங்க கிட்ட மூச்சு விடாம இருந்துருக்காங்க. என்ன கஷ்டம்னாலும் தன்னோட போகட்டும், வயசான காலத்துல அவங்கள கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினச்சிருக்காங்க காஜல்.காஜலிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்த அங்கூர்தன்னோட துக்கங்களையும், வேதனைகளையும் தன்னோட அண்ணன் நிகில் கிட்ட மட்டும் சொல்லி புலம்பியிருக்காங்க காஜல். அதுவும், அவங்க உயிரிழந்த அன்னைக்கு காலையிலதான் அவருகிட்டையே சொல்லி அழுதுருக்காங்க. நிகில் மூலமாத்தான் காஜல் அனுபவிச்ச கொடுமைகள் எல்லாமே அப்பா, அம்மாவுக்கு தெரியவந்துருக்கு. சம்பவத்தன்னைக்கு நைட்டு பணம் கேட்டு காஜல தம்பெல்ஸாலே கண்மூடித்தனமா அடிச்சுருக்கான். அதுல, காஜலுக்கு அதிகபடியான ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிட்டு இருக்க, கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாத கொடூர அங்கூர், காஜலோட அண்ணன் நிகிலுக்கு ஃபோன் பண்ணி உன் தங்கச்சிய கொன்னுட்டேன்னு திமிரா சொல்லிருக்கான். அங்கூர் மற்றும் அவனது பெற்றோர் மீது வழக்குப்பதிவுநிகில் கொடுத்த புகார் அடிப்படையில வழக்குப்பதிவு பண்ண போலீஸ், அங்கூர் மேலையும், அவனோட பெற்றோர் மேலயும் வழக்குப்பதிவு பண்ணி தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க. வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவிய துடிக்க துடிக்க கொலை பண்ண அங்கூர் மேல கடுமையான நடவடிக்கை எடுக்கணும்னு காஜலோட பெற்றோர் வேதனையோட தெரிவிச்சிருக்காங்க. Related Link அரை நிர்வாண கோலத்தில் இளம்பெண் சடலம்