பட்டறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை. இளம்பெண் தற்கொலை செய்யவில்லை, திட்டமிட்ட கொலை என்பதை கண்டுபிடித்த காவல்துறையினர். சிசிடிவி காட்சியில் வசமாக சிக்கிய கொலையாளி. இளம்பெண்ணை ஏமாற்றி சீரழித்தது மட்டுமில்லாமல், கொலை செய்ததற்கு என்ன காரணம்? கொலைக்கான பின்னணி என்ன?அதிகாலையில் போலீஸுக்கு வந்த ஃபோன் கால்விடிஞ்சும் விடியாமலும் கோழிக்கோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருத்தரு ஃபோன் பண்ணிருக்காரு. சார், எங்க ஏரியாவுல உள்ள ஒரு இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, சீக்கிரம் வாங்கன்னு சொல்லிருக்காரு. அடுத்து கொஞ்ச நேரத்துல அந்த நபர், சொன்ன இடத்துக்கு போன போலீஸ்காரங்க, பட்டறையில தூக்குல தொங்கிருந்த இளம்பெண் சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்ச காவலர்கள், தற்கொலை வழக்குப்பதிவு பண்ணி விசாரணையில இறங்குனாங்க. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர்இளம்பெண் தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்க விசாரணையில இறங்குன போலீஸ்காரங்களுக்கு, பல சந்தேக கேள்விகள் வந்துருக்கு. இளம்பெண்ணோட வீட்டுக்கும், அவங்க தூக்கு போட்டுக்கிட்ட பட்டறை இருக்குற இடத்துக்கும் 500 மீட்டர் இடைவேளி இருக்கு. அப்படி இருக்கும்போது, தற்கொலை முடிவு எடுத்தவங்க அவங்க வீட்டுல தற்கொலை பண்ணிக்காம, எதுக்காக பட்டறைக்கு போய் தூக்கு போட்டுக்கிட்டாங்க-ங்குற கேள்வி எழுந்துச்சு. அதனால, போலீஸ்காரங்க அந்த பகுதில உள்ள சிசிடிவி கேமராக்கள செக் பண்ணி பாத்தப்ப, அந்த இளம்பெண் அடிக்கடி பட்டறைக்கு வந்துட்டு போனது பதிவாகிருந்துச்சு. Related Link மதுவுக்கு அடிமையான கணவனால் சீரழிந்த குடும்பம் பட்டறை உரிமையாளர் வைஷாகனிடம் போலீஸ் விசாரணைஅத வச்சு பட்டறை உரிமையாளரான வைஷாகன் கிட்ட விசாரணை பண்ண போயிருக்காங்க. போலீஸ்காரங்கள பாத்ததும் வைஷாகனுக்கு உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரைக்கும் வேர்த்து கொட்டிருக்குது. அத கவனிச்ச காவலர்கள், அவருகிட்ட துருவிதுருவி விசாரணை பண்ணப்ப, வைஷாகன் முறையா பதில் சொல்லாம மாத்தி மாத்தி பேசிட்டு இருந்துருக்காரு. இது சரிப்பட்டு வராதுன்னு நினைச்ச போலீஸ், அவர ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு போய் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சாங்க. அதுலதான், இளம்பெண் தற்கொலை பண்ணிக்கல, இது திட்டமிட்ட கொலை அப்டிங்குறது தெரியவந்துச்சு. வைஷாகனுக்கு இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்கேரள மாநிலம், கோழிக்கோடுல உள்ள எலத்தூர சேர்ந்தவர்தான் இந்த வைஷாகன். இவருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. வைஷாகனுக்கும், அதே ஏரியாவ சேர்ந்த 23 வயசான இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. அப்ப, தனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, நான் சிங்கிள்தான்னு சொல்லியிருக்காரு வைஷாகன். அவர் சொன்ன எல்லாத்தையும் உண்மைன்னு நம்புன இளம்பெண், ஒருகட்டத்துல அவர விரும்ப ஆரம்பிச்சிருக்காங்க. ரெண்டு பேரும் சில ஆண்டுகளா காதலிச்சிருக்காங்க. அப்ப, காதல்-ங்குற பேர்ல இளம்பெண்ண அடிக்கடி தன்னோட பட்டறைக்கு வரவச்சு அவங்களோட எல்லை மீறி பழகிருக்கான் வைஷாகன். Related Link "காதலன் மட்டும் தான் முக்கியம்" திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய இளம்பெண்ரெண்டு பேரும் இப்படி லவ் பண்ணிட்டு இருந்த நேரத்துலதான், வைஷாகனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி, ரெண்டு குழந்தைங்க இருக்காங்க அப்டிங்குற விஷயமே இளம்பெண்ணுக்கு தெரியவந்துருக்கு. கல்யாணமானத மறச்சி என்ன ஏமாத்திட்டியே, என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தலையில அடிச்சு சத்தியம் பண்ணிட்டு இப்படி மோசம் பண்ணிட்டியேன்னு வைஷாகன்கிட்ட பயங்கரமா சண்டை போட்ருக்காங்க. அதுமட்டுமில்லாம, என்னைய உடனே கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு, இளம்பெண் குடச்சல் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. வைஷாகன், இளம்பெண் இடையே ஏற்பட்ட தகராறுகல்யாணத்துக்கு வைஷாகன் மறுப்பு தெரிவிக்க ரெண்டு பேத்துக்கு இடையில அடிக்கடி தகராறு வந்துருக்கு. இளம்பெண்ண இப்படியே விட்டா நம்ம அவக்கூட பழகுன விஷயத்த மனைவிக்கிட்டையும், சொந்தக்காரங்கக்கிட்டையும் சொல்லிடுவாளேன்னு பயந்த வைஷாகன், அவங்கள கொல்ல பிளான் போட்டுருக்கான். சம்பவத்தனைக்கு நைட்டு, வீட்டுல இருந்த இளம்பெண்ணுக்கு ஃபோன் பண்ண வைஷாகன், உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியல, நம்ம ரெண்டு பேரும் சேந்து தற்கொலை பண்ணிக்கலாம்னு சொல்லி அவங்களோட மனச மாத்திருக்கான்.வைஷாகனின் பேச்சைக் கேட்டு சென்ற இளம்பெண்வைஷாகன் சொன்னத எல்லாத்தையும் மலைபோல நம்புன இளம்பெண்ணும், பட்டறைக்கு போயிருக்காங்க. அங்க ரெண்டு ஸ்ட்டூல் போட்டு ஃபேன்ல கயிற மாட்டி வச்சிருந்தவன், இளம்பெண் வந்ததும் தூக்கு மாட்டிக்கிற மாதிரி ஸ்ட்டூல் மேல ஏறிருக்கான், இளம்பெண்ணும் அவன் பண்றத பாத்து அதே மாதிரி பண்ணிருக்காங்க. அப்ப, ஸ்டூல்ல இருந்து திடீர்னு கீழ இறங்குன வைஷாகன், அந்த இளம்பெண் நின்னுட்டு இருந்த டேபிள தள்ளிவிட்டதுல, அவங்க கழுத்த இறுக்கி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாங்க. சடலத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்ட கொடூரன்அதுக்குப்பிறகு, தூக்குல இருந்த இளம்பெண் சடலத்த கீழ இறக்கி சடலத்தோட பாலியல் உறவுல இருந்துருக்கான். அதுக்கப்புறம், இச்சை தீர்ந்ததுக்கு அப்புறம், சடலத்த மறுபடியும் தூக்குல தொங்கவிட்டுட்டு அங்க இருந்து கிளம்பி போன வைஷாகன், மறுநாள் காலையில, பட்டறைக்கு வந்து இளம்பெண் தூக்குபோட்டுக்கிட்டத பத்தி அங்க இருந்தவங்ககிட்ட கத்தி, கூப்பாடு போட்டு சொல்லி நாடகமாடிருக்கான். போலீசார் விசாரணையில பட்டறை உரிமையாளர் வைஷாகன் தான் கொலையாளி அப்டிங்குறத கண்டுபிடிச்ச போலீஸ், அவன் மேல கொலை வழக்குப்பதிவு பண்ணி சிறையில தள்ளிருக்காங்க. Related Link பைக் ஷோரூம், குப்பைக்கிடங்கு, கூவம் ஆறு