அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அதிமுகவின் கோரிக்கையை ஏற்று முன்னதாக இருந்த Y+ பாதுகாப்பு இருந்து Z+ பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு அணியில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், பாதுகாப்புப் படைக்காக ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.