ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில், உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்து பில் கவுன்டரில் பணம் கொடுக்க சென்ற இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. ராஜ்சமந்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்த 27 வயதான சச்சின் என்பவர், அதே பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார்.