கேரளாவில் வீட்டின் படுக்கையறையில் பூந்தொட்டியில் கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லம் பகுதியை சேர்ந்த முகமது முஹ்சின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் 21 பூந்தொட்டிகளில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது, தெரியவந்ததை அடுத்து, செடிகள் மற்றும் வீட்டில் இருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.