கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட நாதாபுரம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இளைஞர்கள் சட்டை வாங்கிக் கொண்டிருந்தனர், ஒரே நேர சட்டையை இரு தரப்பினர் வாங்கியது தொடர்பாக இருதரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. கடையில் துவங்கிய தகராறு சாலைக்கு வந்தது, சாலையில் இரு தரப்பாக மோதிக்கொண்ட நிலையில் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் சென்றது போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றபோது தகராறு ஈடுபட்ட இரு தரப்பு இளைஞர்களும் அங்கிருந்து ஓடி ஒளிந்தனர். சம்பளம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.