யமுனை நதியின் மாசுபாட்டுக்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் பொறுப்பு என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஆண்டு யமுனை நதி மாசுபாட்டின் உச்ச அளவை எட்டியுள்ளதாகவும், அதற்கு யமுனை நதியில் நடைபெற்ற துப்புரவுப் பணிகளை நிறுத்தியதுதான் காரணம் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.