நாளை சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் இந்திய தூதரகம் யோகா பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. லிங்கன் நினைவிடத்தில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு யோகா செய்தனர்.