'ஆமாம் அது என்னோட குழந்தை தான்'உண்மையை உடைத்த மாதம்பட்டி ரங்கராஜ்விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்என்ன நடந்தது? வாங்க பாக்கலாம்...பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடிச்சுருந்தாரு. இவரது கேட்டரிங் சர்வீஸ் எல்லாமே விஐபிகள் மத்தியில் அதிகம் பிரபலம்னே சொல்லலாம். அதே மாதிரி இவர் ‘குக் வித் கோமாளி’ என்ற சின்னத்திரை நிகழ்ச்சியிலும் வருகிறார் என்பது எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான். இவரது மனைவி தாங்க ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்குறாங்க. இந்த சூழலில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஆன ஜாய் கிரிசில்டா என்பவர் சொல்லியிருந்தாங்க.கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மேலும் தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தாங்க. அதே மாதிரி சமூக வலைதளங்களிலும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து தெரிவித்து வந்தார் ஜாய் கிரிசில்டா. இந்த சூழலில் தான் இந்த விவகாரத்தை ஜாய் கிரிசில்டா, மகளிர் ஆணையத்திலும் புகாராக கொடுத்துருந்தாங்க. அந்தப் புகாரின் பேரில் இரண்டு முறை விசாரணையும் நடந்ததுங்க. விசாரணை முடிவுற்ற நிலையில் தான், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பதாக சொல்லப்பட்டது. இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, இருமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கிடையே மகளிர் ஆணையம், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துச்சுங்க. இதுதொடர்பாக, ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ். அப்பாவின் முகத்தையே உரித்து வைத்துள்ளான்” என்று கூறி குழந்தையின் கை விரல் புகைப்படத்தையும் வெளியிட்டுருக்காங்க. மேலும் "என்னுடன் காதலில் இருந்ததையும், திருமணம் செய்து கொண்டதையும், குழந்தை தன்னுடையது தான் என்பதையும் அண்மையில் மகளிர் ஆணைய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டார்" என்று ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளது இப்போ வைரலாகிட்டு வருதுங்க...