அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரமாக இருக்கும் போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீவிஜய புரம் என்று மாற்றி உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஆட்கொள்ளப்பட்டு, காலனி ஆட்சிகால சுவடுகளில் இருந்து இந்தியாவை விடுவிக்கும் எண்ணத்துடன் போர்ட் பிளேயரின் பெயர் ஸ்ரீ விஜய புரமாக மாற்றப்பட்டுள்ளது என எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.விடுதலை போராட்டத்தில் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு உள்ள தனித்துவமான பங்கு மற்றும் விடுதலை பெற்றதன் அடையாளமாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.