உலகில் அதிக சுவையுள்ள மீன் வகைகளில் ஒன்றான சூரை மீன், ஜப்பானில் சுமார் 11 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகவும் பிரபலமான Toyosu மீன்சந்தையில், சூரை மீன் ஏலம் விடப்பட்டது. 276 கிலோ கொண்ட இந்த ஒற்றை சூரை மீனை தனியார் உணவகம் ஒன்று, 11 கோடியே 14 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.