ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலியா 2வது இடத்திலும் இலங்கை அணி 3வது இடத்திலும் உள்ளன. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததால், நியூசிலாந்து அணி ஒரேயடியாக 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது.