உலக குத்துச்சண்டை கோப்பை தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஹிதேஷ் படைத்துள்ளார். 70 கிலோ எடைப்பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, இங்கிலாந்தின் ஓடெல் கமாராவுடன் மோத இருந்தனர். கடைசி நேரத்தில் காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் விலக, ஹிதேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.