பிரதமர் மோடி தலைமையிலான அரசு கையில் லேப்டாப் மற்றும் தேசிய கொடி எடுக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்கவும், அதே சமயம் கல் எறிபவர்களை சிறைக்கு அனுப்பவும் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.