கேரள மாநிலம் பாலக்காட்டில் நான்கு கால்கள் கொண்ட அதிசய பிராய்லர் கோழியை காண அப்பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர்.கேரளாவின் மன்னார்காடு பகுதியில் அலிப் என்பவருக்கு சொந்தமான பிராய்லர் கோழி கடை உள்ளது. இந்நிலையில் இவரது கடைக்கு வாரம்தோறும் பிராய்லர் கோழிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் அங்கு கொண்டுவரப்பட்ட பிராய்லர் கோழிகளில் ஒன்று நான்கு கால்களுடன் இருந்துள்ளது. இதைக் கண்டு ஆச்சர்யமடைந்த கடைக்காரர் அதை வெட்டாமல் வைத்துள்ள நிலையில் அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதை அதிசயமாக பார்த்து வருகின்றனர். வழக்கமான கோழிகளைப் போன்று இந்த கோழியும் கடைக்குள் நடந்து திரிந்தாலும் நான்கு கால்களுடன் இருப்பதால் இதைக் காண அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.பொது மக்களை கவர்ந்துள்ள இந்த நான்கு கால் கோழியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.