மகளிர் உலகக் கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 246 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. முதல்முறையாக உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி:மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. 2005 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை தொடர்களில், இறுதி போட்டி வரை சென்று இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முறை கோப்பையை தவற விடாமல் தட்டிச் சென்றது. இதையும் பாருங்கள் - India Women's Cricket Team | ICC World Champions | மகளிர் உலகக் கோப்பை இந்திய அணி சாம்பியன்