பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றய போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வெறும் 82 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி, 11 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.