மகளிர் டி20 உலகக்கோப்பையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில இலங்கை அணிய இந்திய மகளிர் அணி எதிர்கொள்ள இருக்காங்க. ஏற்கெனவே இரு லீக் போட்டிகள்ல விளையாடி இருக்கிற இந்திய மகளிர் அணி ஒரு போட்டியில வென்று 2 புள்ளிகள பெற்று இருக்காங்க. இந்த நிலையில இலங்கைக்கு எதிரான போட்டியில இந்திய அணி வெற்றி பெற்றா அடுத்த சுற்றுக்கு எளிதா தகுதி பெற வாய்ப்பு ஏற்படும்னு சொல்லப்படுது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க இருக்கு.