மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி போட்டி, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இலங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக லார்ட்ஸில் நடந்த விழாவில் இறுதி போட்டிக்கான தேதி மற்றும் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி லார்ட்ஸ், எட்ஜ்பாஸ்டன், ஹாம்ப்ஷயர் பவுல், ஹெடிங்லி, ஓல்ட் டிராஃபோர்ட் , தி ஓவல் மற்றும் பிரிஸ்டல் கவுண்டி ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி 24 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.