பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேலும் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து கோப்பையை தவறவிட்டு இருந்தது. இந்நிலையில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.