பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 20-ம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.