பெண்கள் டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.