ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையைர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், போலாந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். காலிறுதியில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவுடன் மோதிய கோகோ காப், 7க்கு 5, 6க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதிய இகா ஸ்வியாடெக், 0க்கு 6, 6க்கு 3, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.