மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி.வாரியர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த உ.பி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 17 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை 143 ரன்கள் எடுத்தது.