சிங்கப்பூரில் தான் வேலை செய்த நிறுவனம் தன்னை நடத்திய விதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெண் ஒருவர் கழிவறை காகிதத்தில் ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பியது இணையத்தில் வைரலாகி வருகிறது. SUMMIT TALENT என்ற நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்த ஏஞ்சலா யோஹ்,((Angela Yeoh)) பதிவிட்டுள்ள அந்த பதிவில், நிறுவனத்தில் தான் கழிப்பறை காகிதம் போல நிராகரிக்கப்பட்டதாகவும், தன்னை குறைவாக மதிப்பிடப்பட்டதாகவும் தேவைப்படும் போது பயன்படுத்தி கொண்டு, பின் சிந்தனையின்றி தூக்கி எறியப்பட்டதாக கூறி பணியிடப் பாராட்டுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளார்.