புஷ்பா 2 படத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி வழங்க வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் அல்லு அர்ஜூன் வீட்டில் தாக்குதல் நடத்திய மறுநாள் அவரின் கணவரிடம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளர் வழங்கினார்.