மூன்று ஆண்டுகளாக வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் புதிய அரசு பதவியேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே மோதல்மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று, பிப்ரவரி 4ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கடும் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். மணிப்பூர் மாநிலத்தில், அவ்வப்போது வன்முறை ஏற்பட்டு வருகிறது.மணிப்பூர் முதல்வர் ராஜினாமா இந்த தொடர் வன்முறைக்கு பொறுப்பேற்று, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 பிப்ரவரி 9ஆம் தேதி, பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. முதலில் 6 மாதங்கள் குடியரசுத்தலைவர் ஆட்சி இருந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் பிப்ரவரி 12 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் அஜய்குமார் பல்லாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது பாஜக.உரிமை கோரியுள்ள பா.ஜ.க. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக யும்நாம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் மணிப்பூரின் புதிய முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Related Link எம்.எல்.ஏ.வின் வெறி - அதிர்ச்சி ஆதாரம்