நடிகர் விஜயின் கட்சியால் திராவிட கட்சிகளின் வாக்குகள் சிதறுகிறதா என்பது 2026 பேரவை தேர்தலில் தான் தெரியும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.சென்னை மதுரவாயலில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய்யின் ‘கோட்’ படத்தை விஜயகாந்தின் ‘ராஜதுரை’ உடன் ஒப்பிட்டு விமர்சனம் எழுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், GOAT படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றும், பார்த்துவிட்டு கருத்து சொல்வதாகவும் கூறினார்.